தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது அதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் காவல்துறையினர் மருத்துவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் 144 ஊரடங்கு அமலில் உள்ளது இதனையடுத்து தர்மபுரியில் மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்கள் காய்கறிகள் இதர பொருட்கள் வாங்குவதற்கு சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்து வருகின்றனர் எனவே பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி பிரதான சாலை நான்கு ரோட்டில் லைன்ஸ் கிளப் ஆஃப் தர்மபுரி நகரம் மற்றும் அனைத்து தலைமை செயலக பத்திரிகையாளர் சங்கம் தர்மபுரி மாவட்டம் மற்றும் I win Educational service மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் தர்மபுரி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் ,காவல் துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையபட்டது. ஓவியத்தில் தனித்திரு விழித்திரு விலகி இரு என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஓவியத்தில் கொரோனா  தடுப்பு  பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுடைய படங்கள் வரையப்பட்டிருந்தன. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் டீல் இம்தியாஸ் தனது பிறந்தநாளில் ஏலகிரி மலையின் சாலையோரத்தில் உள்ள குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார்
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன
Image
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
Image